வால்மார்ட்டின் கடைகளின் கருங்கல் சுவர்களில்
மண்டையை முட்டிக்குங்க!
வலியோ,கீறலோ அவன்கடை பிளாஸ்டரை
வாங்கியே ஒட்டிக்குங்க!
கால்மாட்டில் நிக்குது "கவருமென்ட்",தலையில்
கை கொண்டு குட்டிக்குங்க!
கஷ்டமும் நஷ்டமும் ஏழையின் கஞ்சியைக்
காய்ச்சுற சட்டிக்குங்க!
கோல்மால் கம்பெனி,மேல்மாடி கட்டுவான்,
கொச்சையாய்த் திட்டிக்குங்க!
குடைகளைப் பிடிக்குற அரசின் வணக்கம்,அவன்
கொடுக்கிற பெட்டிக்குங்க!
நால்வழிச் சாலையில் பிச்சைத் தொழிலுக்கு
நடைமேடை கட்டிக்குங்க!
நமக்கென அவன்விடும் ஒரேதொழில் அதுதான்
கைகளைத் தட்டிக்குங்க!
மண்டையை முட்டிக்குங்க!
வலியோ,கீறலோ அவன்கடை பிளாஸ்டரை
வாங்கியே ஒட்டிக்குங்க!
கால்மாட்டில் நிக்குது "கவருமென்ட்",தலையில்
கை கொண்டு குட்டிக்குங்க!
கஷ்டமும் நஷ்டமும் ஏழையின் கஞ்சியைக்
காய்ச்சுற சட்டிக்குங்க!
கோல்மால் கம்பெனி,மேல்மாடி கட்டுவான்,
கொச்சையாய்த் திட்டிக்குங்க!
குடைகளைப் பிடிக்குற அரசின் வணக்கம்,அவன்
கொடுக்கிற பெட்டிக்குங்க!
நால்வழிச் சாலையில் பிச்சைத் தொழிலுக்கு
நடைமேடை கட்டிக்குங்க!
நமக்கென அவன்விடும் ஒரேதொழில் அதுதான்
கைகளைத் தட்டிக்குங்க!
nanraga ulathu kavithai... vannakam Siledai Kavi en peyar shanthakumar naan ungalaipartri vigadanil padithen.. naanum ungalai pol isai priyan.. ungalodu neril pesa arvamaga ulathu.. enadhu Email: dshanthn@gmail.com
ReplyDeleteஅருமை. மரபில் பொதியும் நடப்புச் சரக்கு. என் ஆசிரியர் நரசிம்மன் (தாவரவியல்துறை, சென்னைக் கிறித்தவக் கல்லூரி) அடிக்கடி கூறுவார்:தமிழ் மரபுக்கவிதைகளில் நடப்புச்செய்திகளைப் பேசவேண்டும். பேசமுடியுமென்று.
ReplyDeleteஅவர் தங்கள் செய்யுள்களைக் கண்டால் மனமிகமகிழ்வார்.
மகிழ்கிறேன் நானும்.