அணுக்கழி எரிக்கும், கணுக்களை முறிக்கும்
அடுத்தவர் உயிர்க்கும் மறமாகும்;
அவத்தினை வளர்க்கும் புவித்தலம் கறுக்கும்
அனைத்திலும் கலக்கும் விடமாகும்
கணக்குகள் இறைக்கும்; எதிர்ப்பவர் உரைக்கும்
கணிப்புகள் துடைக்கும் புரைகாலே;
கசப்பினை விளைக்கும் பசப்பினைத் தெளிக்கும்
கடற்புனல் கெடுக்கும் கதிராலே;
இணக்கமின் வெளிச்சம் பணக்குழு களிக்கும்
இளைத்தவர்த் திணிக்கும் மிடிமேலே;
இடிப்பொலி வெடிக்கும் அடுகலன் செவிக்குள்
இணைபறை கிழிக்கும் இடராலே;
நுணுக்கங்கள் தொகுத்தே கொடுப்பரை வழக்கால்
நொடித்திட முனையும் அரசோனே,
நுகத்தினை வளைத்தே அகத்துறு மதர்ப்பை
நுடக்கிட வரம்கொடு பெருமானே!
அடுத்தவர் உயிர்க்கும் மறமாகும்;
அவத்தினை வளர்க்கும் புவித்தலம் கறுக்கும்
அனைத்திலும் கலக்கும் விடமாகும்
கணக்குகள் இறைக்கும்; எதிர்ப்பவர் உரைக்கும்
கணிப்புகள் துடைக்கும் புரைகாலே;
கசப்பினை விளைக்கும் பசப்பினைத் தெளிக்கும்
கடற்புனல் கெடுக்கும் கதிராலே;
இணக்கமின் வெளிச்சம் பணக்குழு களிக்கும்
இளைத்தவர்த் திணிக்கும் மிடிமேலே;
இடிப்பொலி வெடிக்கும் அடுகலன் செவிக்குள்
இணைபறை கிழிக்கும் இடராலே;
நுணுக்கங்கள் தொகுத்தே கொடுப்பரை வழக்கால்
நொடித்திட முனையும் அரசோனே,
நுகத்தினை வளைத்தே அகத்துறு மதர்ப்பை
நுடக்கிட வரம்கொடு பெருமானே!
இது பாட்டணு குண்டு
ReplyDelete